இதை தொடர்ந்து தற்போது, 'சக்ரா' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள சக்ரா படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆன்லைன் மோசடி குறித்து தயாராகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகி வைரலானது. தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். விஷால் மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதால் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

மேலும் செய்திகள்: பின்னி பெடல் எடுக்குறாரே தளபதி..! லைக்குகளை குவிக்கும் 'மாஸ்டர்' டெலீட்டட் சீன்..!

இந்நிலையில் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சித்து வருவதாக நடிகர் விஷால் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஏகபோக வரவேற்பு கிடைத்ததோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதையடுத்து சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை விஷால் கைவிட்டதாக கூறப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக தியேட்டரில் சக்ரா படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு...! 'குக் வித் கோமாளி' புகழுக்கு அடித்த ஜாக்பாட்..!

மேலும் செய்திகள்: ஒருவேளை உணவுக்கே திண்டாட்டம்... குடும்பத்துடன் பரிதவிக்கும் பரியேறும் பெருமாள் பட நடிகர்...!

பிப்ரவரி 19ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த மாதம் ரிலீஸ் ஆகாமல் போனது. இதை தொடர்ந்து தற்போது, 'சக்ரா' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 19 ஆம் தேதி 'சக்ரா' ரிலீஸ் ஆக உள்ளதாகவு, மேலும் 'சக்ரா' படத்திற்கு U /A சான்றிதழ் வழங்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் . 

Scroll to load tweet…