பின்னி பெடல் எடுக்குறாரே தளபதி..! லைக்குகளை குவிக்கும் 'மாஸ்டர்' டெலீட்டட் சீன்..!
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக 25 ஆவது நாளை கடந்து ஓடி வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இருந்து, தற்போது வெளியாகியுள்ள டெலீட்டட் சீன் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஆனால் முதல் மூன்று நாட்களிலேயே வசூலில் தட்டித்தூக்கிய மாஸ்டர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் 25 நாட்களை கடந்து பட்டையைக் கிளப்பி வருகிறது. படம் வெளியான முதல் வாரத்தில், “மாஸ்டர்” திரைப்படம் தான் உலக அளவில் முதலிடத்தில் கலெக்ஷன் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஹாலிவுட் படங்களை வசூலில் மாஸ்டர் திரைப்படம் பின்னுக்குத் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது 'மாஸ்டர்' படத்தில் இருந்து வெளியாகியுள்ள, டெலீடட் சீனை பார்த்து பல ரசிகர்கள் இந்த சீனை போய் டெலீட் பண்ணிடீங்களே என, புலம்பி வருகிறார்கள். 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கௌரிகிஷனிடம் இரண்டு மாணவர்கள் தவறாக நடந்து கொண்டதற்காக விஜய், அவர்களை தட்டி கேட்டு, அவர்களது பெற்றோருக்கும் அதனை புரிய வைக்கும் விதத்தில் இந்த வீடியோ உள்ளது.
விறுவிறுப்பான காட்சிகள், அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு என பரபரப்பாக உள்ள இந்த வீடியோ காட்சி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. குறிப்பாக பாலியல் உணர்வை தூண்டுவது அணிந்திருக்கும் உடை கிடையாது என விஜய் கடைசியில் பேசும் 2 நிமிட காட்சி வேற லெவல்... இந்த காட்சி டெலீட் செய்யப்படாமல் ஒருவேளை திரையரங்கில் வந்திருந்தால் வேற லெவலுக்கு வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோ இதோ...