Asianet News Tamil

ஒருவேளை உணவுக்கே திண்டாட்டம்... குடும்பத்துடன் பரிதவிக்கும் பரியேறும் பெருமாள் பட நடிகர்...!

'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசு வயிறார சாப்பிட கூட வழியில்லை என, தன்னுடைய அவல நிலை பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார்.
 

pariyerum perumal actor poor life emotinal news
Author
Chennai, First Published Feb 8, 2021, 6:41 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசு வயிறார சாப்பிட கூட வழியில்லை என, தன்னுடைய அவல நிலை பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வன் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. சமூகத்தில் முக்கிய பிரச்சனை ஒன்றை பேசும் படமாக இந்த படத்தை இயக்கி பலரது பாராட்டுகளையும் பெற்றார் இயக்குனர். இந்த படத்தை, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரோடுக்ஷன் சார்பில் தயாரித்திருந்தார்.

கதிர், கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில்... நாயகனாக நடித்த கதிரின் தந்தையாக நடித்திருந்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. தன்னுடைய 17 வயதில் இருந்தே தெரு கூத்தையே நம்பி பிழைத்து வரும் தங்கராசு, சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பெண் வேடம் போட்டு தெரு கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். இவரது திறமையை பார்த்து வியர்ந்த, மாரி செல்வராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் இவரை நடிக்கவும் வைத்தார்.

மேலும் செய்திகள்: 'மாஸ்டர்' படத்தில் நடிக்க விஜய் - விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா..?
 

ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்த போதும் கூட, இவருக்கு அடுத்து எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதால் தெரு கூத்துகளில் வேடம் கட்டி ஆடுவதையும் நிறுத்திவிட்டார். கஷ்டப்பட்டாலும், தன்னுடைய இரு மகள்களையும் நன்கு படிக்க வைத்துவிட்டார். மேலும் வீடு மோசமாக சிதிலமடைந்தும், மின்சார வசதி, பாத்ரூம் வசதி என எதுவும் இல்லாததால் இவரது மகள்கள் இருவரும் உறவினர்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: வயிறு தெரியும் உடையில்... வடிவேலு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி..! வைரலாகும் வீடியோ
 

குடும்ப கஷ்டத்திற்காக மனைவியுடன் சேர்ந்து, எலுமிச்சை, பணைக்கிழங்கு என தன்னுடைய கிராமத்தில் கிடைக்கும் சிலவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால், கொரோனா காலம் இவரை வியாபாரத்தையும் முடக்கி போட்டது. அதே நேரத்தில் சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு உள்ளே தண்ணீர் புகுந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும் செய்திகள்: மாடர்ன் டிரெஸ்ஸை விட பளபளக்கும் பட்டு சேலையில் தான் பேரழகு..! இளசுகளை ஈர்க்கும் ரெஜினா..!

வேலை இருந்தால் ஒரு வேளையாவது உணவு கிடைத்து வந்த நிலையில், தற்போது ஒரு வேளை கூழ் மட்டுமே உணவாக உண்ணுவதாக கூறி நெஞ்சை உறைய வைத்துள்ளார் தங்கராசு.

தங்கராசுவின் ஏழ்மை நிலை குறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இதையடுத்து, தாசில்தார் ஒருவரை அனுப்பி தங்கராசுவின் வீட்டை ஆய்வு செய்து சரி செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை பெற்றுள்ளார். விரைவில், தங்கராசு அவர்களின் பழுதான வீட்டை சரிசெய்வதோடு, அவரின் மகளுக்கும் தனியார் பள்ளியில் வேலை வாங்கி தருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'அவ்வை ஷண்முகி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது..? பிகினி உடையில் கொடுத்த படு மோசமான போஸ்கள்...!
 

65 வயது வயது நாட்டுப்புற கலைஞரும், வெற்றிப்பட நடிகருமான இவருக்கு, திரையுலகை சேர்ந்தவர்களிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்கவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios