நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகள் வகித்து வரும் நடிகர் விஷாலின் திருமண நிச்சயதார்த்தம் இன்று  ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக நடந்து முடித்துள்ளது. 

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகள் வகித்து வரும் நடிகர் விஷாலின் திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக நடந்து முடித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா வட்டாரத்தில் அடிக்கடி அடிபடும் செய்தியாக இருந்தது விஷால் திருமணம். அவர் யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்பது ரகசியமாக இருந்தது. இதற்கிடையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகே தனக்கு கல்யாணம் நடக்கும் என வாக்கு கொடுத்திருந்தார் விஷால்.

இந்நிலையில் இன்று விஷாலுக்கும் அவரது வாழ்க்கை துணையான அனிஷா அல்லாவுக்கும் ஹைதராபாத்திலுள்ள ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

இது சம்பந்தமாக விஷாலின் நெருக்கமான வட்டாரத்தினர், இந்த நிச்சயதார்த்தம் முன்கூட்டியே திட்டமிடப்படி நடைபெறுகிறது. அதற்காக ஹைதராபாத்திலுள்ள மிக பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியை ஒப்பந்தம் செய்துள்ளோம். மிக குறைவான விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மிக உயர்தர மதிய உணவு விருந்து நடைபெறுகிறது. விஷால், அனிஷா இருவரது வீட்டாரும் இவர்களது திருமண நாளை இன்று அறிவிக்கவுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

மேலும் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து நடிகை குஷ்பு, சுந்தர் சி, ரமணா, நந்தா, ஸ்ரீமன், பசுபதி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சென்றுள்ளதாக தெரிகிறது. விஷாலின் நெருங்கிய நண்பர்கள் இந்நிகழ்ச்சியை வழி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை விஷால் தனது நண்பர்களுக்கு பெரிய பார்ட்டி கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.