நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், என தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் விஷால். கிட்ட தட்ட 37 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 

இந்நிலையில் கடந்த வாரம், விஷாலின் தந்தை, விஷால் திருமணம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், விஷாலுக்கு ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷா, என்ற பெண் பார்த்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இது பெற்றோர் பார்த்து நிச்சயயித்த திருமணம் என கூறி வந்த நிலையில், இது ஒரு லவ் மேரேஜ் என்றும் விஷால் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக தகவல் வெளியானது. 

மேலும் விஷால் திருமணம் செய்ய உள்ள பெண் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் தெலுங்கு மீடியாக்ககில் கசிய, விஷாலின் மணமகள் வெளியானதாக தமிழ் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் தகவல் தீயாக பரவியது. 

இந்நிலையில் விஷால் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஷாலின் திருமணம் பற்றியும்,  அவர் திருமணம் செய்துக்கொள்ள உள்ள மணமகள் என்று ஒரு பெண்மணியின் புகைப்படமும் வெளி வந்து  பரவி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானது.    முறைப்படி அறிவிப்பு  வெளியாகும்.மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாக விஷாலின் PRO  தெரிவித்துள்ளார்.