Asianet News TamilAsianet News Tamil

Premgi : எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ணமாட்டோமா! காதல் மனைவிக்காக சமையல் மாஸ்டராக மாறிய பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி தன்னுடைய காதல் மனைவி இந்துவுக்காக சமையல் செய்து அசத்தியபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video of Actor Premgi cooking for his wife Indhu gan
Author
First Published Jun 20, 2024, 11:53 AM IST

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படம் மூலம் நகைச்சுவை நடிகராக பேமஸ் ஆனவர் பிரேம்ஜி. இவர் நடிப்பை தாண்டி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். 45 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜிக்கு அண்மையில் திருமணம் ஆனது. அவர் சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து நடைபெற்றது.

பிரேம்ஜியின் மனைவி இந்து சேலத்தில் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரேம்ஜி உடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பிரேம்ஜியை விட இந்துவுக்கு 15 வயது கம்மியானவராம். இருந்தாலும் இருவரும் காதலித்ததால் அவர்களுக்கு உறவினர்கள் பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர். பிரேம்ஜியின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... Premgi : பெரியப்பாவிடம் ஆசிபெற்ற பிரேம்ஜி... புதுமண ஜோடியை புன்னகையுடன் வாழ்த்திய இளையராஜா - வைரலாகும் போட்டோ

Viral Video of Actor Premgi cooking for his wife Indhu gan

திருமணத்துக்கு பின்னர் காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்தபடி போட்டோஷூட் நடத்தி வருகிறார் பிரேம்ஜி. அந்த புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது பிரேம்ஜியின் சமையல் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அவருடைய காதல் மனைவி இந்து. அந்த வீடியோ தற்போது செம்ம வைரலாகி வருவதோடு, அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

பிரேம்ஜி லுங்கி கட்டிக் கொண்டு சமைத்துக் கொண்டிருக்கும்போது வீடியோ எடுத்துள்ளார் இந்து, இந்த வீடியோ பின்னணியில், “அவர் யார்னு உனக்கு தெரியுமா; ஒரு காலத்துல அவர் எப்படி வாழ்ந்தவர்னு தெரியுமா” என்கிற முத்து பட டயலாக்கும் ஒலிக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா என்பது தான் பிரேம்ஜியின் மைண்ட் வாய்ஸாக இருக்கும் என கூறி கலாய்த்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indhu PM (@indhu.premgi)

இதையும் படியுங்கள்... 45 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசை பட்ட பிரேம்ஜி! கங்கை அமரன் ஓகே சொன்ன பிறகு... கலைத்து விட்ட பிரபலம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios