Asianet News TamilAsianet News Tamil

அருண் குமார் இயக்கத்தில் சீயான் 62.. "காந்தாரா" பாணியை கையிலெடுக்கும் இயக்குனர்? - போஸ்டரில் உள்ள Clue!

Veera Dheera Sooran : அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "சித்தா" திரைப்படத்தை இயக்கிய அருண் குமார், இப்பொழுது விக்ரமின் 62 வது படத்தை இயக்க உள்ளார்.

Vikrams Veera Dheera Sooran Directed by Arun Kumar plans for sequel and prequel like kantara ans
Author
First Published Apr 18, 2024, 8:30 AM IST

சென்னையில் கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் தான் கென்னடி ஜான் விக்டர் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் விக்ரம். சென்னை லயோலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்த அவர் பல ஆண்டுகளாக வெள்ளித் துறையில் நுழைவதற்கான தனது வாய்ப்பை தேடி அலைந்து வந்தார். அதன் பிறகு சின்னத்திரை நாடகங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொண்டார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான "என் காதல் கண்மணி" என்கின்ற திரைப்படத்தில் நடித்த அவர், அதைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவருக்கு, அவருடைய வாழ்க்கையை மாற்றி போடும் அளவிற்கு கிடைத்த ஒரு திரைப்படம் தான் 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான "சேது" என்கின்ற திரைப்படம். 

27 வயசுலயே இந்த சோகமா... பிரபல சினிமா விமர்சகர் ஆங்கிரி ரேண்ட்மேன் மரணம்!

அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் விக்ரம், "சீயான் விக்ரமாக" உருவெடுத்தார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு என்று பல மொழிகளில் கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த ஆளுமை உள்ள ஒரு நடிகராக விளங்கி வருகிறார். இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த விக்ரம் நடிப்பில் இவ்வாண்டு துருவ நட்சத்திரம் மற்றும் தங்கலான் ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. 

அதில் பா ரஞ்சித்துடன் அவர் இணைந்திருக்கும் தங்கலான், தேர்தல் முடிந்த பிறகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கும் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்திற்கு "வீர தீர சூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு பரபரப்பான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி மெகாஹிட்டான "காந்தாரா" திரைப்படத்தைப் போலவே இரு பாகங்களாக வீர தீர சூரன் படம் உருவாக உள்ளது. அதாவது முதலில் சீக்குவல் (Sequel) பகுதி வெளியாகி, அதன் பிறகு Prequel பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு பாகங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று வெளியான போஸ்டரில் கூட PART 2 என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலி கான்.. ஐசியூவில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?

Follow Us:
Download App:
  • android
  • ios