27 வயசுலயே இந்த சோகமா... பிரபல சினிமா விமர்சகர் ஆங்கிரி ரேண்ட்மேன் மரணம்!
தமிழ், இந்தி, தெலுங்கு அனைத்து மொழி படங்களுக்கும் கோபமாக கத்தி தனது தனித்துவமான பாணியில் விமர்சனம் செய்த ஆங்கிரிமேனின் இழப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யூடியூப் சேனல் மூலம் பிரபலமான சினிமா விமர்சகர் ஆங்கிரி ரேண்ட்மேன் 27 வயதில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழ்ந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.
யூடியூபில் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டே பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் ரேண்ட்மேன். அவருடைய ஆவேசமான விமர்சனம் காரணமாக யூடியூப் ட்ரெண்டிங்கில் வந்தார். இதனால், ஆங்கிரி ரேண்ட்மேன் என்றும் பெயர் பெற்றார். இறக்கும்போது அவருக்கு வயது வெறும் 27 தான்.
ரேண்ட்மேனின் இயற்பெயர் அப்ரதீப் சாஹா. 2017ஆம் ஆண்டு ஆங்கிரி ரேண்ட்மேன் யூடியூப் சேனலைத் தொடங்கி இவர் படிப்படியாக வளர்ந்து பிரபல யூடியூபராக உருவெடுத்தார். இவர் KGF, விக்ரம் போன்ற படங்களை விமர்சித்து வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த விமர்சனத்தால் இவரும் அதிக பிரபலம் அடைந்தார்.
தமிழ், இந்தி, தெலுங்கு அனைத்து மொழி படங்களுக்கும் கோபமாக கத்தி தனது தனித்துவமான பாணியில் விமர்சனம் செய்த ஆங்கிரிமேனின் இழப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் குறித்து இதேபோல பேசி ரசிகர்களைப் பெற்றார்.
Abhradeep Saha Angry Rantman
ஆங்கிரி ரேண்ட்மேனின் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒன்றுக்கு மேற்பட்ட உடல் உறுப்புகளில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் னகாரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை.