Vikram Veda - Theater wave is over 25 days away
விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆனாலும் கூட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.
காயத்ரி புஷ்கர் இயக்கத்தில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியான படம் ‘விக்ரம் வேதா’.
இந்தப் படத்தில் மாதவன், விஜய் சேதுபதி தங்களது நடிப்பால் ரசிகர்கள் மனதை வென்றுள்ளனர் என்றால் மிகையல்ல.
மாதவன் காவல்துறை அதிகாரியாகவும், விஜய் சேதுபதி ரௌடியாகவும் நடித்துள்ள இந்த படமானது விக்ரம் வேதாளம் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பதால், படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் எதிரபர்ப்பு அதிகபடியாக இருந்தது.
சில படங்கள் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும், வெளியான பின்னர் ரசிகர்களை திருப்திபடுத்துவதில் தோற்றுவிடும். ஆனால் விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
விமர்சனம் செய்யும் பலர் இந்த படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால், ஜி.எஸ்.டி. பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த கோடம்பாக்கத்தை தலைநிமிரச் செய்தது இந்தப் படம்.
ரிலீஸாகி 25 நாட்கள் கடந்தும், தமிழகம் முழுவதும் இன்னும் இந்தப் படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது.
