தளபதி 67 படத்தில் இணைந்த ஏஜென்ட் டீனா..! திறமைக்காக வாய்ப்பை வாரி வழங்கிய லோகேஷ் கனகராஜ்..!
'விக்ரம் 'படத்தின் மூலம், 'ஏஜென்ட் டீனாவாக' மாறி ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பிய, வசந்தி தற்போது தளபதி 67 படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம்'. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், சுமார் 400 கோடி வரை வசூல் சாதனை செய்தது. மேலும் இப்படத்தில் வரும் எதிர்பாராத ட்விட்ஸ்ட் தான் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்திலும் இணைத்துள்ளார்.
விக்ரம் படத்தில், 4 நிமிட காட்சியில் நடித்தாலும், ஒட்டு மொத்த ரசிகியர்களையும் மிரள வைக்கும் அளவிற்கு தன்னுடைய பர்பாமென்சில் கலக்கி இருப்பார் வசந்தி. ஒரு வேலைக்காரியாக இருக்கும் இவர், கமல்ஹாசனின் மருமகள் மற்றும் பேரனை காப்பாற்ற, திடீர் என டீனாவாக மாறி 'ஏஜென்ட் டீனா ரிப்போர்டிங் சார்' என கர்ஜனையுடன் கூறும் போது, ஒட்டு மொத்த திரையரங்கமே இவரின் நடிப்பை பார்த்து வியர்ந்து... கை தட்டல்களால் இவரின் நடிப்புக்கு பெருமை சேர்த்தது.
ரகசியமாக நடக்கும் திருமண ஏற்பாடுகள்..! கல்யாணத்திற்கு தயாரான ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானி!
முதல் படத்திலேயே இப்படி ஒரு மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. எனவே இவருக்கு அடுத்தடுத்து, பல வாய்ப்புகளை குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரின் திறமைக்கு, மீண்டும் வசந்தியை அழைத்து தளபதி 67 படத்தில் வாய்ப்பு கொடுத்து கௌரவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இது குறித்த தகவலை வசந்தி தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராய்யின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!
ரசிகர்களால் திரைப்பட நடிகையாக இன்று அறியப்படும் வசந்தி, உதவி நடன இயக்குனராக திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கியவர். குறிப்பாக அஜித், விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு கோரியோகிராபராக இருந்துள்ளார். இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய இவர், மாஸ்டர் படத்தின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்திக்க நேர்ந்தது, இதன் மூலம் ஏற்பட்ட சந்திப்பின் போது வசந்தி, நடனத்தை போலவே நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர் என்பதை தெரிந்து கொண்ட லோகேஷ், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். முதல் வாய்ப்பிலேயே சிக்ஸர் அடித்த வசந்திக்கு, மீண்டும் வாய்ப்பட்டு கொடுத்துள்ளார் லோகேஷ் என்பது குறிபிடித்தக்கது.
பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் மரணம் - திரையுலகினர் இரங்கல்