தங்கலான் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார் சியான் விக்ரம்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்த படம் தங்கலான். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறையில் திரைக்கு வந்தது.

தங்கலான் திரைப்படம் நில அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. கேஜிஎப் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையும், வலியையும் ரத்தமும் சதையுமாக படமாக்கி இருந்தார் பா.இரஞ்சித். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் விமர்சன ரீதியாக பெரியளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இரண்டு வாரங்களை கடந்து வெற்றி நடை போட்டு வரும் இப்படம் இதுவரை ரூ.93 கோடி வசூலித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... உலகநாயகனின் காதலி உயிரைப் பறித்த கேன்சர்... இறுதி மூச்சு வரை கமல் மீதிருந்த காதலை கைவிடாத அந்த நடிகை யார்?

தங்கலான் படத்தின் இந்தி வெர்ஷன் வருகிற ஆகஸ்ட் 30-ந் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியில் வெளியான பின்னர் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இந்தி புரமோஷனுக்காக மும்பையில் கடந்த சில தினங்களாக முகாமிட்டிருந்த விக்ரம் மற்றும் படக்குழுவினர், சென்னை திரும்பிய கையோடு படக்குழுவினருக்கு தடபுடலாக விருந்து வைத்து தங்கலான் பட வெற்றியை கொண்டாடி உள்ளனர்.

நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் பணியாற்றிய் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பிரியாணி உடன் கறிவிருந்து கொடுத்து இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விக்ரமே தன் கையால் அனைவருக்கும் பிரியாணி பரிமாறியது காண்போரை நெகிழச் செய்தது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... முந்திய ராயன்... முதலிடத்தை இழந்த இந்தியன் 2! 2024-ல் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ