முந்திய ராயன்... முதலிடத்தை இழந்த இந்தியன் 2! 2024-ல் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Top 5 Highest Grossing Tamil Films 2024
2024-ம் ஆண்டின் முதல் பாதி தமிழ் சினிமாவுக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஏனெனில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் வெளியான படங்களில் வெறும் 2 படங்கள் மட்டுமே 100 கோடி வசூலை வாரிக்குவித்தன. அதன்பின்னர் ஜூலை மாதத்தில் இருந்து தான் தமிழ் சினிமா பிக் அப் ஆக தொடங்கியது. இதுவரை மொத்தம் 4 படங்கள் 100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை படைத்துள்ளன. அதில் 2 படம் மட்டும் 150 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்களை பார்க்கலாம்.
Dhanush Raayan
1.ராயன்
தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை 26-ந் தேதி திரைக்கு வந்த படம் ராயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இயக்கியும் இருந்தார் தனுஷ். அவரின் 50வது படம் இதுவாகும். இப்படம் விமர்சன ரீதியாக சற்று சறுக்கலை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படம் உலகளவில் ரூ.160 கோடி வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
Indian 2 Kamal
2. இந்தியன் 2
கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படம் தான் இந்தியன் 2. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். இதில் கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த ஜூலை 13-ந் தேதி திரைக்கு வந்தது. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.151 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வி அடைந்தது. பிளாப் ஆனாலும் அதிக வசூல் அள்ளிய படங்கள் லிஸ்டில் இந்தியன் 2 இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... உலகநாயகனின் காதலி உயிரைப் பறித்த கேன்சர்... இறுதி மூச்சு வரை கமல் மீதிருந்த காதலை கைவிடாத அந்த நடிகை யார்?
Maharaja Vijay sethupathi
3. மகாராஜா
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா. இப்படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ், திவ்ய பாரதி ஆகியோரும் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடி வசூலித்து அதிக வசூல் அள்ளிய தமிழ் படங்கள் லிஸ்ட்டில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
Sundar C Aranmanai 4
4. அரண்மனை 4
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மாதம் திரைக்கு வந்த படம் அரண்மனை 4. இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்திருந்தார் சுந்தர் சி. அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்த இப்படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாக் என்கிற புதுவிதமான கான்செப்டை வைத்து திரைக்கதை அமைத்திருந்ததால் அரண்மனை 4 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.101 கோடி வசூலித்து அதிக வசூல் அள்ளிய படங்கள் லிஸ்ட்டில் நான்காம் இடம் பிடித்துள்ளது.
Thangalaan Vikram
5. தங்கலான்
சியான் விக்ரம் ஹீரோவாக நடித்து கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர விடுமுறையில் திரைக்கு வந்த திரைப்படம் தங்கலான். இப்படத்தை பா,இரஞ்சித் இயக்கி இருந்தார். இதில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் தற்போது வரை ரூ.93 கோடி வசூலித்து அதிக வசூல் அள்ளிய படங்கள் லிஸ்ட்டில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... தளபதியின் த.வெ.க மாநாடு தேதி குறிச்சாச்சு! எங்கு - எப்போது? விஜய் போட்ட உத்தரவால் பரபரக்கும் பணிகள்!