உலகநாயகனின் காதலி உயிரைப் பறித்த கேன்சர்... இறுதி மூச்சு வரை கமல் மீதிருந்த காதலை கைவிடாத அந்த நடிகை யார்?
கமல்ஹாசனை முதல் சந்திப்பிலேயே காதலித்த நடிகை ஒருவர், தன் உயிர் பிரியும் வரை அவர் மீதான காதலை கைவிடவில்லை. அந்த நடிகை யார் என்பதை பார்க்கலாம்.
Kamal, srividya
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா அளவில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1970-களில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்த நடிகை ஒருவர், நடிப்பு மட்டுமின்றி கர்நாடக இசையிலும் கைதேர்ந்தவராக இருந்ததோடு, பரதக் கலையிலும் தேர்ச்சி பெற்று இருந்தார். கமல்ஹாசனின் முதல் காதலியும் இவர் தான். அவர் வேறுயாருமில்லை நடிகை ஸ்ரீவித்யா தான். அவரைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Srividya
1953-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி பிறந்தார் ஸ்ரீவித்யா. இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி சினிமாவில் காமெடியனாக நடித்துள்ளார். அதேபோல் இவரது அம்மா வசந்தகுமாரி கர்நாடக சங்கீத பாடகியாக இருந்தார். ஸ்ரீவித்யா பிறந்த சில நாட்களிலேயே அவரது தந்தை அரியவகை நோயால் அவதிப்பட்டார். இதனால் குடும்ப சுமை அனைத்தையும் அவரது தாயார் தான் சுமந்துள்ளார். குழந்தைக்கு பால் கொடுக்க கூட நேரமின்றி உழைத்தாராம்.
Srividya, Mohanlal
அம்மாவுக்கு பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு, இளம் வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்தார் ஸ்ரீவித்யா. கடந்த 1967-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய ஸ்ரீவித்யாவுக்கு முதல் வெற்றி 1971-ம் ஆண்டு தான் கிடைத்தது. பாலச்சந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படம் தான் ஸ்ரீவித்யாவின் முதல் ஹிட் படமாகும். இதில் பேராசியரை காதலிக்கும் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் ஸ்ரீவித்யா.
இதையும் படியுங்கள்... கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் பிரபல நடிகையை திரைப்படத்தில் இருந்து வெளியேற்றிய எம்ஜிஆர்!
Kamal and Srividya Love Story
தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய வெள்ளிவிழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நாயகியாக உருவெடுத்தார் ஸ்ரீவித்யா. தற்போது சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு முதன்முதலில் ஜோடியாக நடித்ததும் ஸ்ரீவித்யா தான். அபூர்வ ராகங்கள் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் நடித்தபோது தான் கமல்ஹாசன் மீது காதல் வயப்பட்டுள்ளார் ஸ்ரீவித்யா.
Srividya Tragic life
ஆனால் ஸ்ரீவித்யாவின் காதலுக்கு அவரது தாய் சம்மதிக்காததால் கமலை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார். ஸ்ரீவித்யா உடனான பிரிவுக்கு பின்னர் நடிகை வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கமல். இது அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் பரதன் மற்றும் ஜார்ஜ் தாமஸ் என இருவரை திருமணம் செய்து ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்ற ஸ்ரீவித்யா, கமல் மீது இருந்த காதலை கடைசிவரை கைவிடவில்லை.
Kamalhaasan Lover Srividya
கடந்த 2003-ம் ஆண்டு அவருக்கு கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்று 2006-ம் ஆண்டு உயிரிழந்தார் ஸ்ரீவித்யா. இறக்கும் முன் தன்னுடைய காதலன் கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசையாக இருந்தது. அதை அறிந்த கமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீவித்யாவை பார்த்து வந்தார். இவர்களின் காதலை மையமாக வைத்து மலையாளத்தில் திரைக்கதை என்கிற படமே வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கிண்டி அருகே நடிகர் சம்பத் ராம் சென்ற கார் விபத்து! நடிகரின் தற்போதைய நிலை?