தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள்(93) உடல்நலக்குறைவால் கடந்த 13ம் தேதி அதிகாலை 1 மணியளவில் காலமானார். கடந்த சில தினங்களாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலம் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கேயே இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. 

முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் தவசாயிம்மாள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

 

இதையும் படிங்க: குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்... அடித்து துரத்தி விட்ட வனிதா... நடந்தது இதுவா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில்,  சற்று நேரத்திற்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்தார். முதல்வரின் தாயார் இறப்பிற்கு ஆறுதல் கூறிய அவர்,  அவருடைய அம்மாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.