'பிகில்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "மாஸ்டர்" படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகா, நெய்வேலி என பல கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உட்பட மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. இதுவரை மாஸ்டர் படத்தில் 3 போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் முதலாவது மற்றும் இரண்டாவது போஸ்டர்களில் விஜய்யின் முழு லுக்கும் தெரிய வந்ததால் தளபதி ரசிகர்கள் செம்ம குஷியாகினர். ஆனால் 3வது லுக்கில் விஜய் சேதுபதியின் முகம் மட்டுமே தெரிந்ததோ தவிர ஃபுல் கெட்டப் என்ன?... என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவியது. 

இதையும் படிங்க: துளி கூட ஆடை இல்லாமல் பிரபல நடிகை நடத்திய போட்டோ ஷூட்... இலை மறைவில் வெளியான ரகசியம்...!

இதனிடையே மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மூலம் விஜய் சேதுபதியின் முழு லுக்கும் வெளியே வந்துள்ளது. ஆம்... நடிகர் விஜய், விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார். 

இதையும் படிங்க: இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை பூமிகா... டாப்லெஸ் போட்டோவால் திகைத்து போன ரசிகர்கள்...!

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில், படக்குழுவினரை சந்தித்த சேவியர் பிரிட்டோ மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை சேவியர் பிரிட்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் மூலம் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் ஃபுல் லுக் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.