இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர்  வெளியாகி வைரலானது. 

இலங்கை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி உட்பட பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 800 என பெயர் வைத்துள்ளனர். போஸ்டரில் விஜய் சேதுபதி பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே இருக்கிறார். 

 

இதையும் படிங்க: இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!

இந்த கேரக்டரில் நடிப்பதற்காகவே விஜய் சேதுபதி தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். படத்தை அடுத்த ஆண்டின் இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என பல வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தி திட்டமிட்டுள்ளனர். ஆனால் கொரோனா நெருக்கடி நேரம் என்பதால் படப்பிடிப்பை முடிக்க எப்படியும் தாமதமாகும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டே ரிலீஸை அடுத்த ஆண்டின் கடைசிக்கு திட்டமிட்டுள்ளனர். வைரலாகும் மோஷன் போஸ்டர் இதோ...