இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!
தனது நிறுவனத்தை அவமதித்த பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்காவிடில், சட்டபடி நடவடிப்பை எடுப்பேன் எனக்கூறியுள்ள ஜோ மைக்கேல், பாலாஜி - யாஷிகா பற்றிய முக்கியமான உண்மை குறித்தும் போட்டுடைத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மாடல் பாலாஜி முருகதாஸ் பங்கேற்றுள்ளார். அனைவரும் தங்களுடைய வாழ்வில் கடந்து வந்த பாதை குறித்து பேசும் போது, பாலாஜி தனது சின்ன வயது கஷ்டங்கள் குறித்து உருக்கமாக பேசினார்.
அப்பா அம்மா இருவருமே தன்னை கவனிக்கவில்லை என்றும் இருவருமே குடிபோதையில் இருப்பார்கள் என்றும்,தன்னை அடித்து கொடுமைப்படுத்துவார்கள் என்றும் கூறினார். மேலும் ஒரு குழந்தையை பெற்று நல்லபடியாக வளர்க்க தெரியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் கேட்டு அவரும் கண்கலங்கி பார்வையாளர்களையும் கலங்க வைத்தார்.
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் வீடியோ வெளியாகி செம்ம வைரலானது. அதைப் பார்த்த ரசிகர்கள் என்னமோ யோக்கியவான் மாதிரி பேசிட்டு இப்படி ஆட்டம் போடுறீயே என திட்டி தீர்க்க ஆரம்பித்தனர்.
BB tamil
பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜி முருகதாஸ் ஒரு நிறுவனத்தை டுபாக்கூர் நிறுவனம் எனக்கூற சனம் ஷெட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் குறிப்பிடும் அந்த நிறுவனத்தில் ஜோ மைக்கல் இதுகுறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தை அவமதித்த பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்காவிடில், சட்டபடி நடவடிப்பை எடுப்பேன் எனக்கூறியுள்ள ஜோ மைக்கேல், பாலாஜி - யாஷிகா பற்றிய முக்கியமான உண்மை குறித்தும் போட்டுடைத்துள்ளார்.
யாஷிகாவும், பாலாஜியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாம். இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தை ஏற்படுத்திய பாலாஜி, அதில் யாஷிகாவை சிக்கவைத்துவிட்டு இவர் மட்டும் தப்பித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணை இப்படியா தன்னந்தனியாக தவிக்கவிடுவது என நெட்டிசன்கள் ஆவேசப்பட்டாலும், யாஷிகா மெளனம் கலைத்து வாய்திறந்தால் மட்டுமே உண்மை வெளியாகும்.