Asianet News TamilAsianet News Tamil

Thalapathy66: தளபதி 66 பர்ஸ்ட் லுக் எப்போது? வெளியானது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு! படு குஷியில் விஜய் ரசிகர்கள்

Thalapathy 66 firstlook: விஜய் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Vijays first look from Thalapathy 66 to arrive on June 21st evening
Author
Chennai, First Published Jun 19, 2022, 5:56 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 திரைப்படம் தயாராகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், சம்யுக்தா, சங்கீதா, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

Vijays first look from Thalapathy 66 to arrive on June 21st evening

தளபதி 66 விறுவிறுப்பான ஷூட்டிங்:

டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் தில் ராஜு இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்கமுழுக்க குடும்ப கதையம்சம் நிறைந்த படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படமாக இது தயாராகி வருகிறது. அதேபோன்று, விஜய்யின் 'தளபதி 66' படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தளபதி 66 பர்ஸ்ட் லுக் எப்போது..? 

Vijays first look from Thalapathy 66 to arrive on June 21st evening

ஜூன்-23ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இவரின் படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகள் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவரது பிறந்தநாளுக்கு முன்னதாகவே ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகவுள்ளது. அதாவது 'தளபதி 66' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வரும் ஜூன்-21ம் மாலை 6.01 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios