'இருளில் ராவணன்' படத்தின் மூலம் ஹீரோயினாக மாறிய விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீது! ஜிவி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்
விஜய் டிவி சீரியல் நடிகை ஹீரோயினாக நடிக்கும், கிரைம் திரில்லர் படமான “ இருளில் ராவணன் “ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION என்ற பட நிறுவனம், பிரமாண்டமாக தயாரித்துள்ள படத்திற்கு “ இருளில் ராவணன் என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர். அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்துள்ளார், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நடிகர் துஷாந்த்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான '7 சி' சீரியலில், குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்ன சீரியல் நாயகியாகவும், பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் அஜித் கோஷி, பாய்ஸ் ராஜன், சந்திரமௌலி, போராளி திலீபன், விஜய் டிவி முல்லை, யூடியுபர் கட்டெறும்பு ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உபாசனா! குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியோடு வரும் ராம் சரண்! வைரல் போட்டோஸ்..!
மெமரீஸ், க் போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆற்றல், சிக்லேட்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் R.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அப்பா, போராளி, நாடோடிகள், ஈசன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த A.L.ரமேஷ் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார். விஜய், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டர் இந்த படத்திற்கும் நடனம் அமைத்து வருகிறார்.
இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், அறிமுகமாகிறார் A.V.S.சேதுபதி. இந்த படம் பற்றி இயக்குனர் A.V.S.சேதுபதி கூறியுள்ளதாவது... முழுக்க முழுக்க ராவண தேசத்தில் நடைபெறும் ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.