- Home
- Cinema
- 'லியோ' படப்பிடிப்பின் போது.. காஷ்மீரில் தளபதியுடன் எடுத்த புகைப்படம் வெளியிட்டு பர்த்டே வாழ்த்து கூறிய த்ரிஷா!
'லியோ' படப்பிடிப்பின் போது.. காஷ்மீரில் தளபதியுடன் எடுத்த புகைப்படம் வெளியிட்டு பர்த்டே வாழ்த்து கூறிய த்ரிஷா!
நடிகை த்ரிஷா தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, வெளியிட்டுள்ள புகைப்படம் தளபதி ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.

தளபதி விஜய் இன்று தன்னுடைய 49-ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். மேலும் இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக தளபதி ரசிகர்கள், இன்று காலை முதலே கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள், பூஜைகள், அன்னதானம் போன்றவற்றை செய்து வருகிறார்கள்.
மேலும் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் இன்று, திருவல்லிக்கேணியில் உள்ள கோசா மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார். இவரை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ரசிகர்கள் தங்களால் முடிந்த நலப்பணிகளை இன்று காலை முதல் செய்து வருகிறார்கள்.
ரசிகர்களுக்கே விருந்து கொடுக்கும் விதமாக தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் இருந்து, நேற்று இரவு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு, தளபதி பாடி, 2000 நடன கலைஞர்களுடன் ஆடிய 'நா ரெடி' பாடல் வெளியானது.
இந்நிலையில் தற்போது 'லியோ' படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை த்ரிஷா, லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த போது, விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.