ஆதி திருமணமா? ஐபிஎஸ் கனவா? மாமியாரிடம் மாட்டி தவிக்கும் சந்தியா
ஒருபுறம் ஆதியின் திருமணம் மறுபுறம் தனது கனவு இதில் எதை சந்தியா வென்று எடுப்பார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.
முன்னதாக போலீஸ் ட்ரைனிங் செல்ல வேண்டும் என கூறும் சந்தியாவிடம் முதலில் சரவணன் சமையல் போட்டியில் வென்ற பணத்தை யார் திருடினார்கள் என்பதை கண்டுபிடித்தால் தான் வெளியூர் செல்ல முடியும் என வேட்டு வைக்கிறார் சந்தியாவின் மாமியார் சிவகாசி. அதை அடுத்து அந்த பணத்தை யார் திருடினார்கள் என்பதை மும்முறமாக தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் சந்தியா.
இன்றைய எபிசோடில் மயிலிடம் செல்லும் சந்தியா பணம் கட்டும் பேண்ட் குறித்து விசாரிக்கிறார்.உன்னால் எனக்கு ஒரு வேலையாக வேண்டும் என மயிலிடம் கூற மயிலும் தான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என கூறுகிறார். மறுபுறம் ரூமுக்குள் அர்ச்சனா செந்திலிடம் உங்க அண்ணி கண்டிப்பாக போலீசாக முடியாது. அத்த வேணும்னு தான் இது மாதிரி செய்றாங்க எனக் கூற செந்தில் இல்லை எல்லாத்தையும் மீறி சந்தியா அண்ணி கண்டிப்பாக போலீஸ் ஆகிவிடுவார்கள் என தெரிவிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...'புஷ்பா 2' படத்தில் சமந்தா வாய்ப்பை தட்டி தூக்கிய 48 வயது கவர்ச்சி புயல்! காத்திருக்கும் கவர்ச்சி விருந்து!
அதே நேரத்தில் உனக்கு கிப்ட், நெக்லஸ் எல்லாம் வாங்கி கொடுத்தேன் என்று யாரிடமும் கூறாதே முக்கியமாக சந்தியா அண்ணியிடம் கூறாதே அவர்கள் ரொம்ப கிண்டல் செய்வார்கள் என கூறுகிறான். பின்னர் நிச்சயதார்த்த மண்டபத்திற்கு எல்லோரும் கிளம்பி விடுகிறார்கள். அப்போது மயில் மட்டும் தனக்கு சிறிது வேலை வீட்டில் இருப்பதால் முடித்துவிட்டு வருவதாக கூறுகிறார். அதே நேரத்தில் சந்தியாவும் தனது பர்சை எங்கேயோ மறந்து வைத்து விட்டேன் தேடி எடுத்து வருகிறேன், நீங்கள் செல்லுங்கள் எனக் கூறிவிட்டு ஆதியின் ரூமிற்குள் போய் இருவரும் பணம் குறித்த தடயம் கிடைக்குமா எனத் தேட அங்கு டைமண்ட் நெக்லஸ் வாங்கிய ரசீது அவர்களுக்கு கிடைகிறது.
மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகா பிஃட்னஸுக்கு காரணம் இவர் தானா? ட்ரைனருடன் ஜோடியாக கொடுத்த கூல் போஸ்..!
ஆதி தான் பணத்தை திருடினார் என்பது உறுதியாகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது. அடுத்த எபிசோட்டில் ஆதியிடம் சந்தியா பணம் குறித்து கேட்க , ஒப்புக்கொள்ளும் ஆதி, அம்மாவிடம் மட்டும் சொல்லாதீர்கள் கல்யாணத்தை நிறுத்திவிடுவார்கள் என கெஞ்சுகிறான். ஒருபுறம் ஆதியின் திருமணம் மறுபுறம் தனது கனவு இதில் எதை சந்தியா வென்று எடுப்பார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.