Asianet News TamilAsianet News Tamil

அடக்கடவுளே..இப்படியுமா இருப்பாங்க..தான் தப்பிக்க சந்தியாவை மாட்டி விடும் ஆதி..கடுப்பான சரவணன்

சிவகாமி நீ இந்த வீட்டு மருமகள் இல்ல நீ தான் சரியான குடும்பத்தலைவி என பாராட்டுகிறார். என் வயிற்றில் பிறக்காத மகள் என சொல்ல அர்ச்சனா  அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.

Vijay TV Raja Rani 2 Today 27 09 2022 Episode update
Author
First Published Sep 27, 2022, 2:02 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2வில் 5 லட்சத்தை கண்டுபிடித்தால் தான் சந்தியாவை போலீஸ் ட்ரைனிங்கிற்கு அனுப்புவதாக அவரின் மாமியார் கூறி விடுகிறார். இதை அடுத்து பணம் கட்டும்பேண்டில் இருந்து நகை வாங்கிய பில் வரை அனைத்தையும் ஆதியின் ரூமில் இருந்து துலாவி எடுத்த சந்தியா நகைக்கடைக்காரரிடம் ஆதி தான் நெக்லஸ் வாங்கியதை உறுதியும் செய்கிறார். இதை அடுத்து நேற்றைய எபிசோடில் ஆதியிடம் அந்த பில்லைக்காட்டி இதை நீதானே வாங்கினாய் என கேட்க ஆதியும் ஒப்புக்கொள்கிறான். நான் ஜெனிக்கு காஸ்ட்லியான நகை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற ஆசையில் பணத்தை திருடி விட்டேன். 

உங்கள் ஆசைக்காக என் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் எனக் கூற ஆத்திரம் அடையும் சந்தியா சுயநலவாதி, உன் அண்ணன் கஷ்டப்பட்டு ஜெயித்த பணத்தை இப்படி திருடிவிட்டாயே! வீட்டிற்குள் திருடுவாயா? என ஆத்திரமாக பேசுகிறார். உடனே ஆதி அண்ணியின்  காலில் விழுந்து கதற  நீ கழுத்தைக் கூட அறுக்க  தயங்கமாட்டாய் என வசைப்பாடி அவனை அனுப்பி விடுகிறார்.

தாவணி பாவாடையுடன் தங்கமாய் ஜொலிக்கும் அதிதி சங்கர்...க்யூட் போட்டோஸ்

 பின்னர் சந்தியாவை பார்க்கும் சரவணன் போலீஸ்க கனவு தான் முக்கியம் திருடனை எந்த விதத்திலும் காப்பாற்றக் கூடாது என்பது போல பேசுகிறார். ஆனால் அடுத்த நாள் காலையில் சிவகாமியை சந்திக்கும் சந்தியா என்னால் திருடு போன பணத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. இதன் காரணமாக என்னை போலீசாக கூடாது என கூறாதீர்கள் என கெஞ்சி கேட்கிறார். அதனை மறுக்கும் சிவகாமி சந்தியாவை கடுமையாக சாடுகிறார். அதோடு கூட்டு சேரும் அர்ச்சனா, சந்தியா தான் பணத்தை பதுக்கி  வைத்திருக்கிறார் என பழியை தூக்கிப் போடுகிறார்.

Vijay TV Raja Rani 2 Today 27 09 2022 Episode update

இன்றைய எபிசோடு அத்தை திட்டியதை எண்ணி தனது அம்மா அப்பா ஃபோட்டோ முன்னாள் நின்னு சந்தியா புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் சரவணன் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்.  நீங்கள் எதுக்கு அழுகுறீங்க என சொல்லிகிறார்  பின்னர் ரூமுக்கு வரும் அர்ச்சனா அந்த பணத்தை எடுத்து வைத்திருப்பது  சந்தியா தான் எனக்கூறுகிறார். அது குறித்து பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதோடு ஒரு அண்ணி சொல்வதில் ஏதோ இருப்பது போல தோன்றுகிறது என அர்ச்சனாவிற்கு சப்போர்ட்டாக ஆதி பேச, இதனால் ஆத்திரமடையும் சரவணன் ஆதியை அடித்து வெளுக்கிறார்.

உடல்நலக்குறைவால் பிரபல இயக்குனர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகினர்

 பின்னர் சரவணனை தடுத்து நிறுத்திய அறைந்து விடும் சிவகாமி உன் பொண்டாட்டியை சொன்னதும் உனக்கு அவ்வளவு கோபம் வருகிறதா? அவனை எதுக்கு அடிக்கிற என  ஆத்திரமாக கேட்கிறார். அந்த ஐந்து லட்சம் பணத்தை திருடியது ஆதி தான் என்ற உண்மையை உடைகிறார் சரவணன். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. நீ தான் பணத்தை எடுத்தாயா என சிவகாமி கேட்க  ஆதி ஆமாம் என்கிறார். ஜெஸ்ஸி பணக்கார வீட்டு பொண்ணு என்பதால் வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தேன் என கூற சரவணன் ஆதியை வெளியில் விரட்டுகிறார். 

Vijay TV Raja Rani 2 Today 27 09 2022 Episode update

பின்னர் எல்லாத்தையும் தடுத்து நிறுத்தும் சந்தியா இது எல்லாம் தெரிந்தால் நீங்க தாங்க மாட்டீர்கள் என்று தான் நான் சொல்லவில்லை. ஜெசி வயிற்றில் பிள்ளையோட நிச்சயதார்த்தம் வரை வந்து காத்துகிட்டு இருக்கா! ஆதியை நாம பேசி சரி பண்ணிக்கலாம் என சொல்ல சிவகாமி நீ இந்த வீட்டு மருமகள் இல்ல நீ தான் சரியான குடும்பத்தலைவி என பாராட்டுகிறார். என் வயிற்றில் பிறக்காத மகள் என சொல்ல அர்ச்சனா  அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios