மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அசோகன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளர்.

பிரபல மலையாள இயக்குனர் அசோகன் காலமானார். இவருக்கு வயது 60. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அசோகன், அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார். கடந்த மாதம் சிங்கப்பூரில் இருந்து கேரளாவுக்கு வந்த அசோகன், கொச்சியில் உள்ள மருத்துவனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் கடந்த ஞாயிறன்று அவர் உயிர் பிரிந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் அசோகனின் மறைவு மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அசோகனின் மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாளத்தில் கடந்த 1989-ம் ஆண்டு ரிலீசான வர்ணம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அசோகன். இவர் இயக்கிய காமெடி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் கடைசியாக மெலடி ஆஃப் லோன்லினெஸ் என்கிற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்துக்காக அவருக்கு கேரள அரசு விருதும் கிடைத்தது. இதையடுத்து படம் இயக்காமல் இருந்து வந்தார் அசோகன். இந்நிலையில் தற்போது அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... உசிலம்பட்டி பள்ளிக்கு வந்த நடிகை கத்ரீனாவை ‘அரபிக்குத்து’ ஆட வைத்த மதுரை டான்ஸ் மாஸ்டரின் நெகிழ்ச்சி பேட்டி