விஜய் டிவி நடிகர் புகழ் நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சின்னத்திரை நடிகர் புகழ் 

விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு?’, ‘அது இது எது’ நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானவர் புகழ். இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். தற்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

புகழ் ஹீரோவாக நடித்த ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’

தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த ‘1947’ என்கிற படத்தில் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரை ஹீரோவாக வைத்து ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்கிற படம் உருவாகி வந்தது. இந்த படத்தை ஜே சுரேஷ் என்பவர் இயக்க, ஜே 4 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் புகழுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார். இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட நிலையில் இன்னமும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படம் ரிலீஸில் தொடர் தாமதம்

படத்தில் அனிமேஷன் காட்சிகள் எதுவும் இல்லாமல் உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு மே 3-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஓராண்டை கடந்த பின்னரும் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லரில் படம் எப்போது வெளியாகும் என்கிற அறிவுப்பு எதுவும் இல்லாமல் வீடியோ மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்

படம் வெளியீட்டு தேதி குறித்து படக் குழுவினரோ, நடிகர்களோ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் படம் எப்போது வெளியாகும் என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் படம் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mr ZOO KEEPER - Trailer | Pugazh | Yuvan Shankar Raja | J Suresh | J4 Studios | U1 Records