'லியோ' ஆடியோ லான்ச் ரத்து! நல்ல முடிவு... இது தான் உண்மை பின்னணி! பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்!
'லியோ' படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டது குறித்து, பதிவிட்டுள்ள பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இது நல்ல முடிவு தான்... என கூறி, இதன் பின்னணி என்ன? என்பதையும் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வந்தது.
மேலும் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்பனை செய்யப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென நேற்று இரவு 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தது, விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தயாரிப்பு நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், 'லியோ' ஆடியோ லான்ச் டிக்கெட்டுகள் போலியாக அச்சிடப்பட்டு விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும், அதேபோல் அரசியல் அழுத்தமும் ஒரு காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்த தயாரிப்பு நிறுவனம், "லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக, டிக்கெட் கேட்டு பல கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நிறுத்த முடிவு செய்ததாகவும், ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி 'லியோ' படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என கூறப்பட்டது."
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து, குறித்து சமூக வலைதளத்தில் பல கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தன்னுடைய கருத்தை X தளத்தில் மூலம் கூறியுள்ளார். அதில் "லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, வெறும் 6000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதிக கூட்டம் இந்த இடத்திற்கு வந்தால், ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று... படக்குழு அஞ்சியதாலும், இதனால் குழுவினருக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்த விழாவை ரத்து செய்ததாக உண்மை பின்னணியை கூறியுள்ளார். மேலும் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளது நல்ல முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D