vijay sethupathy new get up in seethakathi

நடிகர் விஜய் சேதுபதி, முன்னணி நடிகராக வலம் வந்தாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து அசத்தி வருகிறார். ஏற்கெனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருவதால் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் பேரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இவர் 25வது படமாக நடித்து வரும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் இயக்குனர் பாலாஜி தரணி இயக்கத்தில் நடித்து வரும் 'சீதக்காதி' படத்தின் பஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் விஜய் சேதுபதியா இப்படி இருக்கிறார்? என அனைவரும் ஆச்சர்ய படும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மிகவும் வயதானவர் கெட் அப்பில் உள்ளார். 

ஏற்கனவே விஜய் சேதுபதி 'ஆரஞ்சு மிட்டாய்' என்கிற படத்தில், வயதானவர் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…