ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நித்தியா மேனன் நடித்துள்ள 19(1)(a)..! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டீசர்!
பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 19(1)(a) படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளதோடு, படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'மார்கோனி மத்தாய்' என்கிற திரைப்படம் வெளியான நிலையில், நீண்ட இடைவெளிக்கு மாலிவுட்டில், இவர் நடித்துள்ள திரைப்படம் 19(1)(a). இந்த படத்தின் டீசர் நேற்று, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. எனவே இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாவது உறுதியாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
விஜய் சேதுபதி எழுத்தாளராக நடித்திருக்கும் இந்த படத்தில், நித்யா மேனன் டெலிபோன் பூத் மற்றும் ஜெராக்ஸ் கடையில் வேலை செய்பவராக நடித்துள்ளார். மேலும் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் துணை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீஸரிலேயே படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. அதே நேரம் இந்திய அரசியலமைப்பில் உள்ள 19(1)(a) என்கிற பிரிவு இந்த படத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது இப்படம் கருத்து சுதந்திரம் பற்றி பேச உள்ளதுதெரிகிறது .
மேலும் செய்திகள்: கட்டி பிடித்து ஒரே கொஞ்சல்ஸ்... ஷூட்டிங் இல்லாததால் அட்ராசிட்டி பண்ணும் அமலா பால்! ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!
இந்த படத்தை இந்து VS எழுதி இயக்கியுள்ளார். ஆன்டோ ஜோசப் மற்றும் நீதா பின்டோ ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, மனேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடிப்பில், தமிழில் கடைசியாக வெளியான, 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்' மற்றும் 'மாமனிதன்' ஆகிய மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி பாக்ஸ் ஆபீஸிலும் கெத்து காட்டியது. இதை தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார். தமிழை தொடர்ந்து பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் மலையாள திரையுலகிலும் நிரந்தர இடத்தை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகள்: நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா என.. பாலிவுட் பட ரிலீசுக்கு காத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்! யார் யார் தெரியுமா