பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமே ஓடிடியில் ரிலீஸா...! இதென்னடா விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, இந்தியில் நடித்த முதல் படம், நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகிற்கு லோகேஷ் கனகராஜ் என்கிற தரமான இயக்குனரை அறிமுகப்படுத்திய திரைப்படம் மாநகரம். கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை லோகேஷ் கொடுத்ததால் அவரின் படங்களுக்கான மவுசும் அதிகரித்தது. அவரது படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டியும் நிலவியது. குறிப்பாக இந்தியில் லோகேஷ் கனகராஜ் படத்துக்கு செம்ம டிமாண்ட்.
அந்த வகையில் லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கார் என்கிற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் முனீஷ்காந்த் நடித்த வேடத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தியில் அவர் நடித்துள்ள முதல் படம் இதுவாகும்.
இதையும் படியுங்கள்... வெளியான ஒரே நாளில் வெற்றிவிழா கொண்டிய கழுவேத்தி மூர்க்கன் படக்குழு - முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கிற்கு மும்பைக்கார் என பெயரிடப்பட்டு உள்ளது. கடந்தாண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் டிரெய்லரும் ரிலீஸ் தேதியும் வெளியாகி உள்ளன. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 2-ந் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியில் இதற்கு முன் விஜய் சேதுபதி ஃபர்சி என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார். அந்த வெப் தொடர் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது அவர் இந்தியில் நடித்துள்ள முதல் திரைப்படமான மும்பைகாரும் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநகரம் தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படமும் இந்தியில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பேமிலியோடு திருப்பதிக்கு திடீர்விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்; துரத்தி துரத்தி செல்பி எடுத்த போலீஸ்- வீடியோ இதோ