வெளியான ஒரே நாளில் வெற்றிவிழா கொண்டிய கழுவேத்தி மூர்க்கன் படக்குழு - முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' படம் வெளியான ஒரே நாளில் அப்படக்குழுவினர் அதன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
'டாடா' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமாரின் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். கௌதம ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் 310 திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது.
முதல் நாளில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், அந்த வெற்றியைக் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதுகுறித்து ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பேசுகையில், “2023 ஆம் ஆண்டு ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நம்பிக்கைக்குரிய வருடமாக அமைந்துள்ளது. ‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியுடன் இந்த வருடம் துவங்கியது. இப்போது எங்களின் சமீபத்திய வெளியீடான ‘கழுவேத்தி மூர்க்கன்’ மூலம் இன்னொரு வெற்றியைப் பரிசாகக் கொடுத்துள்ளோம்.
இதையும் படியுங்கள்... விஜய் படத்துக்கு ஆப்பு வைக்க முடிவெடுத்த தனுஷ்.. தீபாவளி ரேஸில் இருந்து கேப்டன் மில்லர் விலகியது இதற்குத்தானா?
தமிழகம் முழுவதும் 310 திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அமோகமான வரவேற்பைப் பெற்று வருவதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மீண்டும் எங்கள் படத்தை வெளியிட்டதற்காக நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். இது எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி" என்றார்.
'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் உடன் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் முதல் நாளில் ரூ.40 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... விபத்தின் போது இர்பான் காரில் இருந்தாரா? இல்லையா? விசாரணையில் தெரியவந்த உண்மை - அதிரடி ஆக்ஷன் எடுத்த போலீஸ்