Vijay Sethupathi requested his fans to donate eyes
நடிகர் விஜய் சேதுபதி ஒரு பக்கம் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும், தன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கூட மூத்த சினிமா கலைஞர்களுக்கும், நலிந்த கலைஞர்கள்ம் 100 சவரன் தங்க காசுகள் வழங்கினார். இதை தொடர்ந்து நேற்று பிரபல கண் மருத்துவனை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய, விஜய் சேதுபதி நாம் அனைவரும் கண் தானம் செய்யவேண்டும் என கூறினார், இந்த உலகத்தை பார்க்காமல் தவிக்கும் பலருக்கு நாம் முன்வந்து கண் தானம் செய்தால் அவர்களும் இந்த உலகத்தை எட்டி பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என மனமுருகி பேசினார்.
மேலும் தன்னுடைய ரசிகர்கள் அனைவரும் உலகத்தில் சிறந்த தான மான கண் தானத்தை செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
