மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் இயக்குனர், டீசர் வெளியான தகவலே 45 நிமிடத்திற்கு பிறகு தான் தெரியும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: இந்த கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க..! வரலட்சுமி சரத்குமாரின் பளார் பதில்!
 

இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரகுநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப்படம் "யாதும் ஊரே யாவரும் கேளீர்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.  இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. 

விஜய் சேதுபதி அதிரடி சண்டை காட்சிகளில் தூள் கிளப்பி இருந்தார். ரசிக்க வைக்கும் அழகில் தோன்றி மனம் மயங்கினார் மேகா ஆகாஷ். மொத்தத்தில் அனைவரும் கவரும் வகையில் இருந்தது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர். இந்நிலையில் இந்த டீசர் குறித்து படத்தின் இயக்குனர் அதிர்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா? தெறிக்கவிடும் 'நெஞ்சம் மறப்பதில்லை'..!
 

இதுகுறித்து அவர் கூறுகையில்... அன்பார்ந்த face book நண்பர்களுக்கு...
மன்னிக்கவும்...

இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த #யாதும்ஊரேயாவரும்கேளிர்  #YaadhumOoreYaavarumKelir
படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம்  நான் இயக்கிய படமான ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியாமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும்
நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது.

மேலும் செய்திகள்: ரீலில் மட்டும் இல்லை... ரியலாகவும் துப்பாக்கி சுடுதலில் கெத்து காட்டிய தல! அடுத்த லெவலுக்கு தகுதி பெற்ற அஜித்!
 

தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன். என இவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.