கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு. இவர்கள் ஏற்கனவே, 'செக்கச்சிவந்த வானம்' படத்தில், நடிகர் சிம்புவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்தனர். இதைத்தொடர்ந்து அடுத்து வேறு ஏதாவது படத்தில் இவர்கள் இணைவார்களா என்கிற எதிர்பார்ப்பு, அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், சிம்புவும், பிக்பாஸ் பிரபலமான நடிகை பிந்துமாதவி நடித்துள்ள படத்திற்காக இணைய உள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்' மற்றும் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெளியான 'இன்ஸ்பெக்ட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் சிம்புவும் - விஜய் சேதுபதியும் வெளியிட உள்ளனர். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.