செப்டம்பர் 9 ஆம் தேதி, 'லாபம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன்னர் வெளியானது. 

செப்டம்பர் 9 ஆம் தேதி, 'லாபம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன்னர் வெளியானது.

நடிகர் விஜய் சேதுபதி 7 சி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள 'லாபம்' திரைப்படம், செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு பின், திரையரங்குகள் திறக்கப்பட்ட உடனேயே இந்த படத்தை படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளது.

இதில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துக்களும், ஒலிக்கும் போராட்ட குரலும், என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை. இதனை நிரூபிக்கும் விதமாகவே இந்த படமும் உருவாகி உள்ளதை ட்ரைலர் உறுதி செய்துள்ளது. இன்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்த போது, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் , இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

உண்மையான லாபம் என்பது எது? பாட்டன் , முப்பாட்டன் வெட்டி வைத்து சென்றுள்ள ஏறி, குளங்கள் தான் உண்மையான உள்கட்டமைப்பு, அதனை பணத்திற்காக மாசு படுத்துவதை குறித்தும், விவசாயம் குறித்து இந்த அப்படம் பேசுகிறது. இடையே, ஸ்ருதிஹாசனின் கலர் ஃபுல் பாடல் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ள கருத்துக்கள் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரைலர் இதோ...


YouTube video player