'பிகில்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' படத்தை பார்க்க, அவரின் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் உள்ளனர்.

மார்ச் 15 ஆம் தேதி அன்று வெளியான, இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தளபதி பேசியதை தற்போது வரை செம்ம ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும் பலரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக கூட விஜய்யின் பேச்சும், நடனமும் தான் இருந்தது.


ஆனால், சர்ச்சையாக ஏதாவது பேசுவாரா என எதிர்பார்த்த சிலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறலாம்.

இந்நிலையில், 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, விஜய்யின் பெயர், 'ஜான் துரைராஜ்' என்றும்... அவரை அனைவரும் 'JD ' என அழைப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும், மாணவர்களின் டீனாக விஜய் நடித்துள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக விஜய் அணிந்து நடித்த ஐடி கார்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் யாரும் பார்த்திராத ஒரு கெட்டப்பில் சந்தன கலர் நிற ஷர்ட் அணிந்தபடி உள்ளார் விஜய்.

விஜய்க்கு வில்லனாக நடித்து வரும், விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தின் பெயர் பவானி என கூறப்படுகிறது. மார்ச் 22 ஆம் தேதி 'மாஸ்டர்' படத்தின், ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில், அடுத்த மாதம் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.