சினிமா ரசிகர்கள் தங்களுக்கு ஏதாவது நடந்தால் கூட தாங்கி கொள்வார்கள் ஆனால் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கோ அல்லது அவர்களை சார்தவர்களுக்கோ ஏதாவது என்றால் தாங்க மாட்டார்கள். அப்படி பல ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட பிரபல நடிகை ஒருவரின் கணவர் விபத்தில் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தளபதி விஜய் நடித்து, கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  'சச்சின்'. இந்த படத்தில் செம்ம ஹாட்டாக  ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தவர் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு.  காண்டம் விளம்பரத்திலும் கணவருடன் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் இவருடைய கணவர் நடிகர் கரண் சிங் லண்டனில் நடைபெற்ற 'ஆடட்'  என்கிற பாலிவுட் படத்தின் ஷூட்டிங் கலந்துகொண்டார். படப்பிடிப்பில் கரண் சிங் ஸ்டண்ட் காட்சியில் நடித்த போது  எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவருக்கு  spiral tibial fracture என கண்டறிந்து அன்று இரவே அறுவைசிகிச்சை செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் படத்தின் ஷூட்டிங் சில மாதங்கள்  தள்ளி போகும் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவத்தால் சோகமாக இருக்கும் நடிகை  பிபாஷா பாசுவுக்கு ரசிகர்கள் தொடந்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.