ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்கள்! வேன் மீது ஏறி அன்பை வெளிப்படுத்திய தளபதி.! வைரல் வீடியோ!
தளபதி விஜய் தற்போது 'கோட்' படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றுள்ள நிலையில், அங்கு ரசிகர்களை அவர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தற்போது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட காட்சிகள், வெளிநாடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கேரள மாநிலம் திருவனந்தபுரம் நேற்று விரைந்தது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள, சென்னையில் இருந்து விமானம் மூலம், திருவனந்தபுரம் வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் தளபதியை பார்க்க ரசிகர்கள் அவரின் கார் மீதி விழுந்தபோது... லேசாக கார் கண்ணாடி உடைந்தது.
தற்போது 'கோட்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே 'கோட்'படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில்... விஜய் ரசிகர்கள் கூடியதை தொடர்ந்து, தளபதி விஜய் அவர்களை அவர்களை ஷூட்டிங் வேன் மீதி ஏறி அனைவரின் அன்புக்கும் நன்றி கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில், அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுதிரியும் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, மைக் மோகன், லைலா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு... யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.