லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

 

இதையும் படிங்க: அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா... உடலை இறுக்கி பிடித்திருக்கும் உடையில் உச்சகட்ட கவர்ச்சி...!!

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. 


கடந்த 7 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு கண்டிப்பாக மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அதிலும் மண்ணைப் போட்ட தயாரிப்பாளர் தரப்பு, மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாகாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்நிலையில் தீபாவளிக்கு டீசர் அல்லது டிரெய்லரையாவது கண்ணில் காட்டுங்கள் என விஜய் ரசிகர்கள் பட்டாளம் மன்றாடி வந்தது. நேற்று கூட மாஸ்டர் பட அப்டேட் கேட்டு, #அப்டேட்_குடுங்க_லோகி என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். 

 

இதையும் படிங்க: அடி ஆத்தி ‘சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமியா இது?.... மெல்லிய புடவையில் மெருகேறி ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படம் குறித்த அல்டிமேட் தகவலை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான XB Film Creators தெரிவித்திருந்தது. அதன்படி சொன்ன நேரத்திற்கு சரியாக சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது, மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியான நவம்பர்   14ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியின் யூ-டியூப் பக்கத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் டீசரை வெடி வெடித்து வரவேற்க தயாராகி வருகின்றனர்.