இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இது தான் மாஸ்டர் பட பாடல்களின் லிஸ்டா?, இல்ல குறும்புகார நெட்டிசன்களின் போட்டோ ஷாப் வேலையா? என தெரியவில்லை. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்துவருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: ரிலீஸுக்கு முன்பே தட்டித்தூக்கும் "மாஸ்டர்"... சோசியல் மீடியாவில் அசைக்க முடியாத சாதனை படைத்த விஜய்...!

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் - விஜய் சேதுபதி இடையிலான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய் - விஜய்சேதுபதி இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வது போன்ற மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி, உலக அளவில் ட்ரெண்டானது.

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இது தான் மாஸ்டர் பட பாடல்களின் லிஸ்டா?, இல்ல குறும்புகார நெட்டிசன்களின் போட்டோ ஷாப் வேலையா? என தெரியவில்லை. ஆனாலும் அந்த லிஸ்ட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

Scroll to load tweet…

இதற்கு முன்னதாக விஜய்யின் ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோஸ், விஜய் சேதுபதி சென்னை ஷூட்டிங்கில் நடந்த காட்சி என சோசியல் மீடியாவில் வெளியானது. படத்திற்கு மிக, மிக முக்கியமான இருபெரும் கதாபாத்திரங்களின் லுக் வெளியானதால் படக்குழு ஏற்கனவே அப்செட்டில் இருந்தது. இதனால் படம் குறித்த எந்த தகவலும் வெளியே கசியாதவாறு ரகசியம் காத்து வந்த நிலையில், பாடல் லிஸ்ட் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.