லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் - விஜய் சேதுபதி இடையிலான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்காக, நியூ இயர் ட்ரீட்டாக மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், பொங்கல் விருந்தாக செகன்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இரண்டு போஸ்டர்களிலும் விஜய்யின் தனித்துவமான லுக்குகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து அந்த இரண்டு போஸ்டர்களையும் உலக அளவில் விஜய் ரசிகர்கள் தாறுமாறு வைரலாக்கினர். 

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளியானது. அதில் விஜய் - விஜய் சேதுபதி நேருக்கு நேர் மோதிக்கொள்வது போன்று சும்மா கெத்தா வெளியான போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.  இதன் மூலம் சோசியல் மீடியாவின் கிங் நான் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் விஜய். 

இதையும் படிங்க: மோடியை போல காட்டுக்குள் செல்லும் ரஜினி... "மேன் வெர்சஸ் வைல்டு" நிகழ்ச்சியில் பங்கேற்பு..!

ஆம் முதலில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை 3.4 மில்லியன் டுவிட்டுகளும், செகன்ட் லுக் போஸ்டர் 1.1 மில்லியன் ட்வீட்டுகளும், மூன்றாவது லுக் போஸ்டர் 1.3 மில்லியன் ட்வீட்டுகளும் செய்யப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.