Asianet News TamilAsianet News Tamil

மகனை ஆசையோடு கூப்பிட்ட ஷோபா... மதிக்காமல் சென்ற விஜய் - வைரலாகும் வீடியோ

தமிழக வெற்றிக் கழகத்தின் விழாவில் கலந்துகொள்ள வந்த ஷோபா சந்திரசேகரிடம் நடிகர் விஜய் பேசாமல் தவிர்த்துவிட்டு சென்ற வீடியோ வைரலாகிறது.

Vijay insulted his Mother shoba in TVK Flag Reveal Function viral video gan
Author
First Published Aug 22, 2024, 10:46 AM IST | Last Updated Aug 22, 2024, 11:44 AM IST

தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடிகர் விஜய், அதன் கொடி அறிமுக விழாவில் இன்று கலந்துகொண்டார். சென்னை பனையூரில் நடைபெற்ற இந்த கொடி அறிமுக விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், அக்கட்சிக்கான பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.

கொடியை அறிமுகம் செய்த கையோடு மேடையேறி பேசிய விஜய், விரைவில் தங்கள் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதையும் உறுதிப்படுத்தினார். தன்னுடைய உரையின் போது தனது தாய், தந்தைக்கு நன்றி தெரிவிக்க மறந்த விஜய், பின்னர் மீண்டும் மேடையேறி அவர்கள் இருவருக்கும் நன்றி கூறிவிட்டு சென்றார். மேடையில் தாய், தந்தை மீது பாசத்தை பொழிந்த விஜய், அந்த விழா முடிந்ததும் செய்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய்யின் அப்பா அம்மா வந்திருக்காங்க; ஆனா மனைவி சங்கீதா மிஸ்ஸிங்; அப்ப அது உண்மை தானா?

Vijay insulted his Mother shoba in TVK Flag Reveal Function viral video gan

அது என்னவென்றால், விழா முடிந்ததும் அங்கு வந்திருந்த ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார் விஜய். அப்போது அங்கு வந்த ஷோபா, விஜய்யை சந்தித்து பேச வந்தார். ஆனால் அவரை பார்த்தும் பார்க்காதபடி, முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார் விஜய். மகன் தன்னை கண்டுகொள்ளாத சோகத்தை வெளிப்படுத்த முடியாமல் ஷோபா அங்கு திகைத்து நின்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக சாடி வருகின்றனர். மேடையில் பாசமாக பேசியதெல்லாம் நடிப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர். தாயை மதிக்காமல் சென்ற விஜய்யை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். விஜய்யின் கட்சி நிகழ்ச்சியில் அவரது தாய் ஷோபாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டது இதுவே முதன்முறை ஆகும். இந்த வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.

இதையும் படியுங்கள்...  கொடிக்கு பின்னணியில் இருக்கும் குட்டி ஸ்டோரி முதல் மாநாடு தேதி வரை; விஜய் ஸ்பீச் ஹைலைட்ஸ் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios