விஜய்யின் அப்பா அம்மா வந்திருக்காங்க; ஆனா மனைவி சங்கீதா மிஸ்ஸிங்; அப்ப அது உண்மை தானா?
நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். விழாவில் விஜய்யின் பெற்றோர் கலந்து கொண்டனர், ஆனால் அவரது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளாதது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Vijay
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 2026 தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் கூறியிருந்தார். கோட் தவிர, ஏற்கனவே ஒப்பந்தமான மற்றொரு படத்தை முடித்து சினிமாவை விட்டு ஒதுங்கி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் கூறியிருந்தார்.
Tvk Party Flag
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள கட்சி தலைமை நிலையத்தில் இந்த விழா நடைபெற்றது. சிவப்பு, மஞ்சள் வண்ண பின்னணியில் போர் யானை, வாகை மலர் உருவங்கள் கொடியில் உள்ளன. மேலும் தமிழன் கொடி பறக்கு என்று தொடங்கும் பாடலும் வெளியிடப்பட்டது.
Vijay
தொடர்ந்து உரையாற்றிய விஜய் “ தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய மிகவும் பெருமையாக உள்ளது. இது கட்சிக்கான கொடி அல்ல. தமிழகத்தின் வருங்கால வெற்றிக்கான கொடியாகவே இதை பார்க்கிறேன். இந்த கொடி பற்றிய விளக்கத்தை கட்சியின் முதல் மாநாட்டில் தெரிவிக்கின்றேன்.” என்று விஜய் கூறினார்.
Vijay TVK Party Flag Event
த.வெ.கவின் கொடி அறிமுக விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் அவரின் மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகள் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகியோர் பங்கேற்கவில்லை.
Vijay TVK Party Flag Event
விஜய் அரசியல் பிரவேசத்தின் மிக முக்கியமான விழாவாக கருதப்படும் இந்த விழாவில் விஜய்யின் மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளாதது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு விஜய்யும் – சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சங்கீதா இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
Vijay, sangeetha
இதனால் சங்கீதாவுக்கு விஜய் கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லையா? அல்லது வேறு காரணங்களால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லையா என்பது தெரியவில்லை. ஒருவேளை விஜய்யும் சங்கீதாவும் பிரியப் போவதாக வெளியான உண்மை தானா என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.