கிட்டத்தட்ட 49 நாட்கள் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். இன்றும் கடந்த காலத்தை மறவாத சந்திர சேகர் வாரத்தில் ஒரு நாளாவது அங்கு தூங்குவதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதி விஜய் :
பிரபல இயக்குனர் சந்திர சேகரின் மகன். தனது தந்தை இயக்கத்தில் சினிமாவிற்குள் வந்த.இளம் நடிகர் குழந்தை நட்சத்திரமாக வெற்றியில் அறிமுகமான விஜய் தற்போது சினிமாவில் 29 வருடங்களை முடித்துள்ளார். தந்தையின் உதவியால் அறிமுகமாகி இருந்தாலும் பின்னாட்களில் எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ளார். விஜய் தனது 10 வயதில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி மற்றும் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இது நம் நீதி வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
எட்டிப்பிடிக்க இயலாத தூரத்தில் விஜய் :
காதல் வாலிபனாக வளம் வந்த விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு விமர்சன ரீதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த தோல்வி 29 ஆண்டு சாதனைக்கு வித்திட்டது. தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் தயாராகியுள்ளது. இதையடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு ...Jilla Unseen : வாவ்..மஸாய் வெளியான ஜில்லா அன்சீன்..தந்தை மகனின் பாச நடை..

விஜயின் தந்தை பிரபல இயக்குனர் :
விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவள் ஒரு பச்சை கிளி படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர். பின்னர் 1981-ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டரை படம் சந்திரசேகரும் ஹெட்ரிக் வெற்றியை பெற்று தந்தது. 1992 இல் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் தனது மகன் விஜயை அறிமுகம் செய்தார். சந்திரசேகர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் . இவருடம் எஸ்.சங்கர் , எம்.ராஜேஷ் , பொன்ராம் ஆகியோர் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள்.
விஜய் மக்கள் இயக்கம் :
தந்தது மகனை சினிமாவில் வெற்றி காண செய்ததை போலவே அரசியல் வாழ்விலும் வெற்றியாளராக்க வேண்டும் என்கிற முழு முனைப்பில் இறங்கிய சந்திரசேகர். மக்கள் இஐக்கம் என்னும் அமைப்பை அரசியல் கட்சியாக மற்ற முழு முயற்சி செய்தார் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சந்திர சேகர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக அறிவித்தார். பின்னர் இது குறித்து விஜய் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த முடிவை அவர் கைவிட்டார். இருந்தும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் களம் கண்ட பலரும் வெற்றி கனியை ஈட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..Thalapathy 67 update : தளபதி 67-ல் ஹீரோயினும் இல்ல.. பாட்டும் இல்லையா? முரட்டு சிங்கிளாக நடிக்கிறாரா விஜய்?
பிளாட்பார வாழ்க்கை :
பட இயக்குணவதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த சந்திரசேகர் தங்க இடமின்றி பாண்டிபஜார் பிளாட் பாரத்தில் உறங்கியுள்ளார். கிட்டத்தட்ட 49 நாட்கள் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளார். இன்றும் கடந்த காலத்தை மறவாத சந்திர சேகர் வாரத்தில் ஒரு நாளாவது அங்கு தூங்குவதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

