ஒரு போட்டோ வந்தாலே அன்றைய ட்ரெண்டிங் நம்பர் ஒன்னில் அது தான் இருக்கும் அந்த அளவிற்கு வெறித்தனமாக வைரலாக்கு வருவார்கள். தற்போது வெளியாகி உள்ள ஜில்லா அன்சீனை மட்டும் விட்டு விடுவார்களா. இந்த காட்சியில் விஜய், மோகன்லால் இருவரும் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ரசிகர்களின் மனதை வென்ற விஜய் :
இளைய தளபதி விஜய் என்று செல்லமாக ரசிகர்கள் அழைக்கும் நடிகர் விஜய். பிரபல இயக்குனர் சந்திர சேகரின் மகன். தனது தந்தை இயக்கத்தில் சினிமாவிற்குள் வந்த வாலிபன் பின்னாட்களில் எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ளார். விஜய் தனது 10 வயதில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி மற்றும் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இது நம் நீதி வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நாளைய தீர்ப்பு விமர்சனம் :
பின்னர் நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக களம் கண்ட விஜய் அப்போதைக்கு பெரிதாக வெற்றி எதையும் ருசிக்கவில்லை. முதல் படத்தின் விமர்சனத்தால் துவண்டு போன விஜய் பின்னர் தன்னை தானே தேற்றிக்கொண்டார். பின்னரும் பெரிதாக எந்த படமும் காய் கொடுக்காத நிலையில் 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
முக்கிய செய்திகள்.. THALAPATHY66: தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ஓ சாமி பாடல்'' புகழ் ராஷ்மிகா.! படு குஷியில் ரசிகர்கள்..!
காதல் நாயகன் :
பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ்மோர், ப்ரியமுடன், என்றென்றும் காதல், மின்சார கண்ணா, காதலுக்கு மரியாதை என காதலில் புதுவித அனுபவங்களை கொடுத்தார் விஜய்.

20 ம் நூற்றாண்டில் புதிய அவதாரம் :
90 களுக்கு பிறகு ஆக்சன் கலவைகளை கையில் எடுத்தார் விஜய். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, என வரிசையாக படங்கள் வெளியாக திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி என வெற்றி படங்களும் விஜய்க்கு கைகொடுத்தது.
மோகன்லால் உடன் ஜில்லா :
அந்த வரிசையில் 2014-ம் ஆண்டு வெளியான ஜில்லா விஜய் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. போலீஸாகும் ரவுடி கான்செப்டில் உருவான இந்த படத்தில் விஜயின் வளர்ப்பு தந்தையும் மதுரை டானாகவும் நடித்திருந்தார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் கலக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த அன் சீன் காட்சிகள் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்...Thalapathy 67 update : தளபதி 67-ல் ஹீரோயினும் இல்ல.. பாட்டும் இல்லையா? முரட்டு சிங்கிளாக நடிக்கிறாரா விஜய்?
ரசிகர்கள் கொண்டாட்டம் :
விஜய் அப்டேட் என்றாலே ரசிகர்களுக்கு அலாதி குஷி தான்.. ஒரு போட்டோ வந்தாலே அன்றைய ட்ரெண்டிங் நம்பர் ஒன்னில் அது தான் இருக்கும் அந்த அளவிற்கு வெறித்தனமாக வைரலாக்கு வருவார்கள். தற்போது வெளியாகி உள்ள ஜில்லா அன்சீனை மட்டும் விட்டு விடுவார்களா. இந்த காட்சியில் விஜய், மோகன்லால் இருவரும் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
