தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததற்காக போலீசார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை கொடூரமாக தாக்கிய போலீசார், மறுநாள் கோவில் பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட அப்பா மற்றும் மகன் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதையும் படிங்க: பிரபல தொகுப்பாளினி டிடி-யை ஓங்கி அறைந்த தீனா... வைரல் வீடியோவால் டென்ஷனான ரசிகர்கள்...!

ஆனால் போலீசாரின் தாக்குதலால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தந்தை, மகனின் இந்த கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக மக்கள் கொந்தளித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி வரை இந்த விவகாரத்தில் குரல் கொடுத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை தமிழகஅரசு, மதுரை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ இவ்வழக்கை கையில் எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க:  “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஐ.ரகு கணேஷ், ஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே கொதிப்படையச் செய்த இந்த கொடூர சம்பவம் குறித்து நடிகர் விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க:  “பயங்கரமான குடிகாரர் பீட்டர் பால்”... முகத்திரையை கிழிக்கும் முதல் மனைவி...!

அதில், கொரோனாவை கொடிய வைரஸ் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த கொடிய வைரஸிடம் இருந்து கூட பலர் உயிர் பிழைத்து வந்துவிடுகிறார்கள். சாத்தான்குளம் சம்பவத்தை கேள்விப்படும் போது, இப்படிப்பட்ட போலீசாரிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்  என நினைக்கும் போதே ஈரக்கொலை நடுங்கிறது. இந்த கொரோனா காலத்தில் எத்தனை காவலர்கள் கடவுளுடைய பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்கள். அதை மறக்கவும் முடியாது. மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இப்படிப்பட்ட கொடுமைக்காரர்களா?.  இந்த சாத்தான்கள் உடனடியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.