விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் விருது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக களம் இறங்கி கலக்குகிறார். தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங்.

 

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

அதற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் டிடி, அந்த அசத்தல் போட்டோஸையும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் இருந்த டிடி சமீபத்தில் தனது காலை உடைத்துக்கொண்டார். அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன இது? இப்படி பண்ணிக்கிட்டீங்களே என டிடி-யை விட அதிகமாக வலியால் துடித்தனர். அப்படிப்பட்ட ரசிகர்கள் தங்களுடைய பேவரைட் தொகுப்பாளினி டிடி-யை காமெடி நடிகர் தீனா ஓங்கி அறையும் வீடியோவை பார்த்தால் என்ன ஆகும்?... செம்ம ஷாக்கிங்கா இருக்காது. 

 

இதையும் படிங்க:  “பயங்கரமான குடிகாரர் பீட்டர் பால்”... முகத்திரையை கிழிக்கும் முதல் மனைவி...!

டிடி-யும், “கைதி” படத்தில் நடித்த காமெடி நடிகரான தீனாவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “எங்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் “குக் வித் கோமாளி” சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழை, டிடி ஓவராக கலாய்க்கிறார். இதனால் கடுப்பான தீனா புகழை அடிக்க அந்த அடி டிடி-யின் கன்னத்தில் விழுந்துவிடுகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ இதோ...