டிக்கெட் புக்கிங்கிற்கே இப்படியா... கேரளாவில் விஜய் ரசிகர்கள் செய்த மாஸ் சம்பவம் - வைரலாகும் வீடியோ
கேரளாவில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் நடத்திய பைக் ஊர்வலம் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் படம் ரிலீஸ் ஆனால் அங்கு மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட தயங்குவார்கள் அந்த அளவுக்கு கேரளா நடிகர் விஜய்யின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. தற்போது லியோ படம் ரிலீஸ் ஆக உள்ளதால், அங்கு தற்போதே கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
கேரளாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லியோ படத்தின் முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. குறிப்பாக கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படமாக கேஜிஎப் 2 இருந்து வந்த நிலையில், லியோ திரைப்படம் முன்பதிவு மூலமே அந்த சாதனையை முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
லியோ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை அடுத்து கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்ததோடு மட்டுமின்றி தியேட்டரில் நடிகர் விஜய்க்கும் பிரம்மாண்ட கட் அவுட் வைத்து அமர்களப்படுத்தி உள்ளனர். மேலும் மேள தாளத்துடன் லியோ புக்கிங் தொடங்கியதை விஜய் ரசிகர்கள் கொண்டாடியதை பார்த்து தமிழ்நாட்டு விஜய் ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
டிக்கெட் புக்கிங்கிற்கே இப்படினா அப்போ படம் ரிலீஸ் ஆனா என்ன ஆகுமோ என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். கேரள விஜய் ரசிகர்கள் செய்த மாஸ் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் கேரளா விஜய்யின் கோட்டை என ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகத்தை மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன் - SK மீது கடும் கோபத்தில் டி.இமான்