'பத்து தல' இசைவெளியீட்டு விழாவில் விஜய், தனுஷ், கமல்... சிம்புவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் சிம்புவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் பட குழுவினர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா - ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணன் இயக்கத்தில், சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் 'பத்து தல' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மகன், அமீன் பாடிய 'நினைவிருக்கா' என்கிற புரமோஷன் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்கிய நிலையில், தற்போது படு பிரமாண்டமாக நடந்து வருகிறது.
மேலும் இன்று ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் விதமாக, 'பத்து தல' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குடித்த தேதி இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது. சிம்பு அதிரடி தாதா வேடத்தில் நடித்துள்ள இப்படம், மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு தகவல்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிம்புவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர். சிம்புவை வாழ்த்தி தனுஷ், விஜய், கமல், போன்ற பிரபலங்கள் பேசி இருந்த பழைய வீடியோக்களை பட குழுவினர் தொகுத்து தற்போது ஒளிபரப்பினர். இது சிம்புவுக்கு மட்டுமின்றி அவரின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவே அமைந்தது. தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.