இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிப்பது மட்டுமே தொற்றை தடுப்பதற்கான வழியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற விஷயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹன்சிகா... ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... வைரலாகும் போட்டோ...!

மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை செயல்படுத்துவதற்காக காவல்துறையினர் கொளுத்தும் வெயிலிலும் காவல் காத்து வருகின்றனர். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கையெடுத்து வணங்கி வருகின்றனர். நெருக்கடியான நேரத்தில் தங்களது குடும்பத்தினரை கவனிக்க முடியாமல், நாட்டை காக்கும் முயற்சிக்காக பாடுபடும் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தற்போது தெலங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா, கொரோனா பீதியை கூட பொருட்படுத்தாமல் தெலங்கானா டிஜிபி எம்.மகேந்தர் ரெட்டியை நேரில் சந்தித்துள்ளார். தெலங்கானா காவல்துறையின் உன்னதமான சேவையை பாராட்டியுள்ள விஜய் தேவரகொண்டா  அவர்களை, “உண்மையான வீரர்கள்” என்று வாழ்த்தியுள்ளார். 

இதையும் படிங்க: உடைமாற்ற இடமில்லாமல் தவித்த தமன்னா... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கிடைத்த பகீர் அனுபவம்...!

மேலும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, ஒட்டு மொத்த தெலுங்கு திரையுலகம் சார்பில் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கை காப்பது மட்டுமின்றி, மக்களின் அத்தியாவசிய தேவைகள், கொரோனா வைரஸ் தடுப்பு உள்ளிட்ட பணிகளில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் காவல்துறையினரை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.