கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் “பையா”. சென்னையிலிருந்து மும்பை வரை தொடர்ந்து காரில் பயணிக்கும் படி கதை வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது. இந்த படத்தில் தமன்னா, கார்த்தி வேற பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள். சாதாரண ஒன்சைடு லவ் போல ஆரம்பிக்கும் கதை ரவுடிகள் சேசிங், ஹைவே ரெய்டு என பட்டையைக் கிளப்பியிருக்கும். 

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்திற்கு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்த படத்திற்காக தமன்னா எந்த மாதிரியான கஷ்டங்களை அனுபவித்தார் என்று மனம் திறந்துள்ளார் லிங்குசாமி. 

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

“பையா” சூட்டிங் முழுவதுமே ஹைவேயில் படமாக்கப்பட்டது. அப்போது என்னிடம் கேரவன் வசதி கூட கிடையாது. இதனால் தமன்னா உடை மாற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். உடனே அங்கிருந்த மூன்று, நான்கு பெண்களை புடவையை வைத்து தன்னை சுற்றி மறைக்கும் படி  சொல்லிவிட்டு, நடுவில் நின்று உடை மாற்றிக்கொள்வார். அவ்வளவு டெடிகேஷன்  உடன்  இந்த படத்தில் நடித்து கொடுத்தார் என்று பாராட்டியுள்ளார். 

இதையும் படிங்க: கொரோனாவை தட்டித்தூக்கிய தாய் பாசம்...ஊரடங்கில் சிக்கித் தவித்த மகனுக்காக ஸ்கூட்டரில் 1400 கி.மீ. பயணித்த தாய்!

ஒரு படத்தில் நடித்த புதுமுக நடிகைகள் கூட கேரவன் இல்லை என்றால் ஷூட்டிங்கிற்கு வர மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றனர். இல்லையேல் பைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட சொல்லி லட்சக்கணக்கில் செலவு வைத்து தயாரிப்பாளர்களை கலங்கடிக்கின்றனர். ஆனால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா தான் நடிக்கும் படத்திற்காக செய்த இதுபோன்ற முயற்சிகள் நிச்சயம் பாராட்டுதலுக்குரியவை.