6 படம் பிளாப்... ஒரு சூப்பர் ஸ்டாரை இப்படியா பேசுவது? வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா!
விஜய் தேவரகொண்டாவின் பேச்சு ரஜினிகாந்தின் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை, தலைவரின் அலப்பறையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்கள் விஜய் தேவரகொண்டா பேச்சால் கடுப்பாகிவிட்டனர்.
சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் ரஜினிகாந்த் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சை தவறாகப் புரிந்துகொண்ட தலைவர் ரசிகர்கள் பொங்கி எழுந்து விஜய் தேவரகொண்டாவை வம்படியாக கேள்வி கேட்டு வருகிறார்கள்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரும் சமந்தாவும் நடித்து வரவிருக்கும் 'குஷி' திரைப்படத்தின் சமீபத்திய புரோஷன் நிகழ்வில் பேசிய விஜய் தேவரகொண்டா, ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்கள் படங்கள் தோல்வி அடைந்தாலும் அவர்களின் மார்க்கெட் பாதுகாப்பாகவே இருக்கிறது என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களின் நட்சத்திர மதிப்பை ஒரு சில தோல்விகளால் அசைக்க முடியாது என்று கூறினார். “சூப்பர் ஸ்டார்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். ரஜினி சார் 6 ஃப்ளாப்களைக் கொடுத்தாலும் அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வந்து 500 கோடி வசூல் செய்யும் ‘ஜெயிலர்’ போன்ற படத்தில் நடிக்கலாம். நாம் அதை வாயை மூடிக்கொண்டு பார்க்கதான் வேண்டும்” என்று விஜய் தேவரகொண்டா கூறினார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி பற்றி பேசிய விஜய் தேவரகொண்டா, “அவரால் பேக்-டு-பேக் ஃப்ளாப்களையும் கொடுக்க முடியும், ஆனால் சரியான எனர்ஜி உள்ள இயக்குனரை சந்தித்தால், 'சங்கராந்தி' போல மீண்டும் ஒரு பரபரப்பான படத்துடன் வருவார். சிரு சார் இந்தத் துறையையே மாற்றினார். அவர் வந்ததும் அதிரடி காட்சிகள், நடனம், நடிப்பு என அனைத்தும் முற்றிலும் மாறிப்போனது. அவர் பலரை இத்துறையில் நுழைய ஊக்கப்படுத்தினார்" என்று பாராட்டினார்.
விஜய் தேவரகொண்டாவின் பேச்சு ரஜினிகாந்தின் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை, தலைவரின் அலப்பறையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்கள் விஜய் தேவரகொண்டா பேச்சால் கடுப்பாகிவிட்டனர். ஒருவர், "எப்போது ஆறு படம் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"அதெல்லாம் ஃபிளாப் படங்கள் இல்ல... தர்பார், அண்ணத்தே இல்லாம் சராசரியான படங்கள்" என்று ஒரு ரசிகர் முட்டி கொடுக்கிறார். ரஜினியைப் பற்றி இப்படிப் பேசியதைத் தாங்கமுடியாமல் துடித்த மற்றொரு சூப்பர் ஸ்டார் ரசிகர், “இவ்வளவு பேசுவதை நிறுத்துங்கள். எல்லாவற்றையும் பற்றி ஒரு கருத்து சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்தப் பேச்சில் சூப்பர் ஸ்டாரைப் பாராட்டும் விதமாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை" என்று விஜய் தேவரகொண்டாவுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
நிலவை சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும் சந்திரயான்-3! 70 கி.மீ தூரத்தில் எப்படி இருக்கு பாருங்க!